புதிய கெட்டப்
நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது.
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். அவரின் புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.