சினிமாமருத்துவம்

நடிகை சமந்தா வெளிநாட்டிற்கு பயணம்!

வெளிநாடு பயணம் 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘யசோதா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். யசோதா படத்த்தின் டப்பிங் பணிகளை கூட சிகிச்சை எடுத்துக்கொண்டே நிறைவு செய்தார். தற்போது சமந்தா வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சமந்தாவை தென் கொரியா செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்பெயரில் விரைவில் சமந்தா தென் கொரியா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

Related posts