ப்ரோமோ பாடல்
2007-ம் ஆண்டு வெளியான கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதனைத்தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’. நீண்ட நாட்களாகியும் வெளியாகாமல் இருந்த இப்படம் தற்போது வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஈரக்காற்றே வீசு என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#IdamPorulYeaval
Thanks to @SonyMusicSouthPromo song
Thanks to Indian singer@Nkpriyanka21@VijaySethuOffl @TheVishnuVishal @aishu_dil #PooRam@Nanditasweta #Vadivukkarasi @Actor_ArulDass @thisisysr @Vairamuthu @dirlingusamy @ThirrupathiBros @onlynikil @CtcMediaboy pic.twitter.com/l15NfGZhEv
— Seenu Ramasamy (@seenuramasamy) November 9, 2022