சந்திர கிரகணம்
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம். முழு சந்திரனும் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதேபோல் சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி நேர சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
அதன்படி இன்று இந்தியாவில் முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கி 6 மணி 19 நிமிடங்களுக்கு முடிந்தது. இந்த கிரகணத்தின் இறுதி நிலையை அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் காண முடிந்தது.