அறிவியல்

வெண்ணிலவும் விஞ்ஞானமும் – நிலவை பற்றிய அறிவியல் தகவல்களின் சிறு தொகுப்பு

பூமியை சுற்றி வரும் நிலவுக்கு பின் இருக்கும் அறிவியல் ஆச்சர்யங்களை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்

நிலவில் வளி மண்டலம் கிடையாது.காற்றோ வானிலை மற்றமோ அங்கில்லை.நிலவிற்குச் சென்றவர்களின் காலடித்தடங்கள் 10 மில்லியன் வருடங்கள் அழியாமல் இருக்குமாம்.இதற்குக் காரணம் நிலவில் மண் அரிப்போ காற்றோ இல்லை என்பவைகளாகும்.

 

நிலவின் ஒரு முகத்தை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், பார்க்கவும் முடியும். நிலவின் மறு முகத்தை செய்ற்கைகோல்கள் மட்டும் தான் இதுவரை படம் பிடித்துள்ளன.
பூமியிலிருந்து சுமார் 250,000 மையில்கள் (384,400 கிலோமீட்டர்கள்) தொலைவில் நிலவு உள்ளது.

ராக்கட்டில் 13 மணி நேரத்திலும், ஒளி வேகத்தில் 1.52 நொடிகளிலும் நிலவைச் சென்றடையலாம்.

சராசரியாக, சந்திரன் பூமியை 2,288 மைல்கள்/மணி (3,683 கிமீ/மணி) வேகத்தில் சுற்றி வருகின்றது.

ஒவ்வொரு நாளும் 12.2 டிகிரிகள் கிழக்கு நோக்கி நகரும். ஒரு சந்திர மாதத்தில் 29.5 நாள்கள் x 12.2 டிகிரிகள் = 360 டிகிரிகள் சுற்றி வந்து ஒரு மாதத்தினை நிறைவு செய்யும்.

நிலவின் படி நிலைகள் :

அமாவாசையிலிருந்து வளரும் நிலா ஏழாவது நாளில் சுற்றின் முதல் கால்பகுதியில் (அரைவட்ட நிலாவாக) இருக்கும். பதினைந்தாவது நாளில் முழு பெளர்ணமியாகும். பின் தேயத் துவங்கும்.

இருபத்தி மூன்றாவது நாளில் இறுதிக் கால்பகுதியில் (அரைவட்ட நிலவாக) இருக்கும். மீண்டும் ஒரு அம்மாவாசையில் ஒளியிழந்து அடுத்தச் சுற்றிற்காக ஆயத்தமாகும்.

சூரியனைப் போல் சந்திரனும் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். உதிக்கும் மற்றும் மறையும் நேரம் மட்டும் நாளுக்கு நாள் மாறுபடும்.

அமாவாசை அன்று சூரியன் உதிக்கும் அதே நேரத்தில் சந்திரனும் உதிக்கும். சூரியன் மறையும் அதே நேரத்தில் மறைந்து விடும்.

அடுத்த நாள் சூரியனை விட சற்று தாமதமாக உதித்து சற்று தாமதமாக மறையும்.

அதனால் தான் முதல் பிறையை மேற்கு வானில் மறையும் பொழுது சற்று நேரம் பார்க்க முடிகிறது. இரண்டாவது நாள் இன்னும் சற்று தாமதமாகி மீண்டும் மேற்கு வானில் மறையும் நேரத்தில் பார்க்க முடியும்.

தினந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வரும் நிலவினால் பூமியில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. நிலவின் ஈர்ப்பினால் தான் கடல் மட்டத்தில் அவ்வப்பொழுது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

​முற்றிலுமாகச் சூரியனின் உதவியாலேயே வெளிச்சம் தருகின்ற இரவு நேரத்து விளக்கு. சூரிய ஒளியில் இயங்கும் முதல் சாதனம் இதுவாகத்தான் இருக்கும்.

Related posts