தமிழ்நாடு

தேர்வு பயத்தால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை ! – வேலூரில் சோகம்

வேலூரில் தேர்வு பயத்தால் பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

பிளஸ்  2 – பொதுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா காலத்திலும் 10, 11, 12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது.  சுமார் 8.31 லட்சம் மாணாக்கர்கள், 3,119 தேர்வு மையங்கள், 4,291 பறக்கும் படையினர் மற்றும் 73 சிறை கைதிகள் இந்த வருடம் எழுதுகிறார்கள். மாணாக்கர்கள் முகக்கவம் அணிந்து வர கட்டாயம் இல்லை, உடல் நிலை பாதிப்பு உள்ளவர்களும், தேவைப்படுபவர்களும் அணிந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.

வேலூர் மாணவன்

இந்நிலையில், வேலூரை சேர்ந்த மோனிஷ் என்ற மாணவர் தொரப்படி அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார்.


இவரது தந்தை சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். தாய் பரிமளா அரவணைப்பில் மோனிஷ் வளர்ந்து வந்தார். பரிமளா அருகில் உள்ள தனியார் நிறுவனத்தை வேலை செய்து கொண்டு மகன் மோனிஷ்சை படிக்க வைத்து வந்தார். வேலை முடித்து வீட்டிற்கு வந்த பரிமளா மோனிஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டுள்ளார். மோஷிசை அழைத்து படிக்குமாறு தாய் பரிமளா கண்டித்துள்ளார்.

மாணவன் தற்கொலை

இதனை, அடுத்து அறைக்குள் சென்ற மோனிஷ் கதவை தாழிட்டு கொண்டார். மகன் படிக்கிறான் என்று நினைத்து கொண்ட இருந்து பரிமளா, நெடு நேரமாகியும் மாணவனின் குரல் கேட்காததால் பரிமளா கதவை திறந்த போது மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து பரிமளா அலறி கூச்சலிட்டார். அதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

விசாரணை

தகவல் அறிந்து அங்கு வந்த அரியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் அருகே பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

.

Related posts