சினிமாவெள்ளித்திரை

அஜித்தை மிஞ்சிய விஜய் பட பாடல்!

விஜய் பாடல்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய்யின் 66-வது திரைப்படமாக ‘வாரிசு’ உருவாகியுள்ளது. டில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே இணையத்தில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ 29 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் தற்போது வாரிசு பட பாடல் இதனை மிஞ்சியுள்ளது.

Related posts