கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மாநிலங்களவையில் வைகோ எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்துள்ளார்.
வைகோ எம்.பி
கச்சத்தீவின் உரிமையை மீட்பதற்காக, இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு
வரும் பல வேளையில் தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறதா ?. இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், இது குறித்து கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுக்களை நடத்துமா ? என மாநிலங்களவையில் வைகோ எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், ‘இந்திய அரசாங்கம் 1974 மற்றும் 1976ல் இலங்கையுடன் கடல் எல்லை ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தங்களின் கீழ் கச்சத்தீவு, இந்தியா மற்றும் இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கோடு இலங்கை பக்கத்தில் உள்ளது. தற்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ராஜதந்திர முறையில் நிறுவப்பட்ட வழிமுறைகள் மூலம் இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என மத்திய இணை அமைச்சர் பதிலளித்தார்.

