என் உடல், உயிர் அனைத்தும் தமிழ் மக்களுக்கு சொந்தமானது என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழிசை அறிக்கை
திமுக தனது நாளிதழான முரசொலியில் பதவி மோகத்தில் முந்திரிக்கொட்டை போல் பேசுகிறார் தமிழிசை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கடுமையாக விமர்சனம் செய்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ் என் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் இருக்கிறது. நான் தமிழகத்தில் முந்திரிக்கொட்டை போல் பேச வேண்டியதில்லை. தமிழகத்தின் தென்ப்பகுதியான நாகர்கோவிலில் பிறந்த எனக்கு எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
மேலும், என் சொந்த ஊரான தமிழகத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் தவறு எதுவும் இல்லை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

