மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஐந்து பக்தர்கள் தீவிர வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
500 ஆண்டு பாரம்பரிய கோயில்
மேற்கு வங்காளத்தில் நார்த் 24 பர்கானாஸ் என்ற மாவட்டத்தில் பனிஹாத்தி என்ற பகுதியில் உள்ளது இந்த கோயில். 500 ஆண்டு கால பாரம்பரியம் வாய்ந்த இந்த கோயிலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், இந்தாண்டு இஸ்கான் அமைப்பு சார்பில் இந்த கோயில் திருவிழா நடைபெற்றது.
வெயிலின் தாக்கம்
18ம் நூற்றாண்டை சேர்ந்த துறவி பாபா லோக்நாத் பிறந்தநாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நேற்று முன்தினம் நடந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல பக்தர்கள் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். மயங்கி விழுந்த பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழப்பு
முதலில் வெப்பம் தாங்க முடியாமல் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு தற்போது 5 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது இதனால் விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து இதுகுறித்து அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயிரிழந்த குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளார்.
நிர்மல் கோஷ்
அதனையடுத்து இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ நிர்மல் கோஷ் கூறுகையில், ‘கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் விழா நடைபெறவில்லை. எனவே, இந்தாண்டு அதிக கூட்டம் திரண்டுள்ளது. இதில் பல வயதான பக்தர்கள் இருந்ததால் அவர்களால் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியவில்லை’