அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க சதி – அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு !

தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டி ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்று அமைச்சர் கே. என் நேரு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பொதுக்கூட்டம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கலைஞரின் கருணாநிதியின் 99 பிறந்தநாள் விழா மற்றும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Chengalpattu

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு

அப்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் இடையே பேசுகையில், ‘திமுகவின் தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. விவசாயக்கடன், கூட்டுறவு கடன் தள்ளுபடி என மகத்தான சாதனைகளை செய்துள்ளது. ஸ்டாலினை விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த H.ராஜா, கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறுகிறார்.

KN Nehru Dmk

சிறந்த ஆட்சி

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஆட்சி எப்படி நடத்துவது, அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த காலத்திலேயே திறம்பட செயல்பட்டவர் முதல்வர் ஸ்டாலின். எப்படியாவது சாதி கலவரத்தை உண்டு பண்ணி இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. சிறு பிரச்சனையை கூட பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறது பாஜக.

Stalin

2024 திமுக

அதிக ஆட்கள் ஒன்றும் பாஜகவில் இல்லை. அதிமுக தற்போது கமுக்கமாக இருக்கும் காரணத்தினால், அவர்கள் பெரிதாக காட்டிக்கொள்கிறார்கள். அவர்களால் நம்மை ஒன்றும் வென்று விடமுடியாது. வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்’ என தெரிவித்தார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர செயலாளர் நரேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய திமுக கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டி ஆட்சியை கலைக்க சதி வேலை நடக்கிறது என்று அமைச்சர் கே. என் நேரு பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts