வாட்ஸ் ஆப் மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பாடநூல்களை பெரும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு
டிஎன்பிஎஸ்சி என்றழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கீழ், தமிழ்நாடு அரசுப் பணிகளில் பணியாற்ற ஊழியர்களை தேர்ந்தெடுக்க தேர்வுகள் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் நடைபெறவில்லை. அதன்படி குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் கடந்த 21ம் தேதி நடைபெற்றது.
குரூப் 4 தேர்வு
தமிழகம் முழுவதும் நடைபெற்ற சுமார் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சம் பேர் எழுதினார்கள். இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதில் மொத்தம் 7,382 காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். மேலும், இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படுகிறது.
அறிவிப்பு
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
விண்ணப்பித்த அனைவரும் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இதற்காக பயிற்சி அளிக்கும் டிஎன்பிஎஸ்சி வகுப்புகளுக்கு ஆயிர கணக்கில் பணம் கொடுக்கும் நிலை இருக்கிறது. இதனால் ஏழை மக்கள்கள் பயன்பெற முடிவதில்லை. இதற்காக அனைத்து வகை மக்களும் பயன்பெறும் வகையில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி என்ற பயிற்சிப்பட்டறை புதிய வசதி ஒன்றை செய்துள்ளது.
புதிய வசதி
வாட்ஸ் ஆப் மூலம் முன் பதிவு செய்தால், டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுகளுக்கு இலவச பாடநூல் அனுப்பி வைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கு பயன்படும் நோக்கில் இந்தப் பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதும் அனைவரும் முன்பதிவு செய்து இந்த பாடநூல்களை இ-புத்தகங்களாக இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாடெமி தெரிவித்துள்ளது.
இலவச பாடநூல்
இந்த பாடநூல்களை பெற விரும்புபவர்கள் 91763 92791 என்ற எண்ணுக்கு TNPSC GROUP-IV TEXT BOOKS என்று வாட்ஸ் ஆப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி பாடநூல்கள் ‘பிடிஎஃப்’ வடிவில் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், இந்த பாடநூல்களை முழுமையாக படித்தாலே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம் என்று அந்த அகாடமியின் இயக்குனர் வீரபாபு கூறியிருக்கிறார்.