7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ், அனிருத் இணைந்து பணியாற்றும் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் படம்
நடிகர் தனுஷின் 44வது திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தை யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை என்பதால், ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிடப்பட்டது. அதன்பெயரில் 50 நாட்களில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டுமொத்தமாக எடுத்து முடிக்கப்பட்டது.

தனுஷ், அனிருத் காம்போ
இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் உடன் அனிருத் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சமீபத்தில் தனுஷ், நித்யா மேனன் இருவரும் நடனமாடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் சிங்கிள்
முதலில் படம் இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்பிறகு திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு. இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
அதில் அனிருத் ரவிச்சந்திரன், நடன இயக்குனர் சதீஷ், நடிகர் பொன்னம்பலம் பேசுவது போல அறிவிப்பு வீடியோ அமைந்துள்ளது. தாய் கிழவி என்னும் இந்த முதல் சிங்கிள் பாடலை நடிகர் தனுஷ் எழுதி உள்ளார் மற்றும் சதீஷ் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

