பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்று மின் வழித்தடங்கள், மின் வடங்கள் ஆகியவற்றில் தடையின்றி சேவை வழங்குவதற்காக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பெயரில் நாளை சென்னையில் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று மின்சார வாரியம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

மின்வெட்டு
சென்னையில் நாளை (15.06.2022) மயிலாப்பூர், தாம்பரம், போரூர், கிண்டி, தண்டையார்பேட்டை, பெரம்பூர், கே.கே நகர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர், தாம்பரம்
மயிலாப்பூர் பகுதியில், லேடி வெல்லிங்டன் கேம்பஸ், ஐயம்பெருமாள் தெரு, நல்லண்னா லேன், தாம்பரம் பகுதியின் புதுதாங்கல் தேவராஜ் பிள்ளை தெரு, நித்தியானந்தம் நகர், இரும்புலியூர் ஒரு பகுதி ஐ.ஏ,எப் அகஸ்தியர் தெரு, அஞ்சநேயர் கோயில் தெரு மாடம்பாக்கம் வேங்கைவாசல் மெயின் ரோடு, சாந்தி நகர், இந்திரா நகர், அன்பு நகர், கே.கே சாலை, கோபாலபுரம், சுசீலா நகர் பம்மல் அனகபுத்தூர் முழுவதும், பம்மல் முழுவதும், பொழிச்சலூர் பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்படும்.

போரூர், கிண்டி
போரூர் பகுதியின் ராமபுரம் வெங்கடேஸ்வரா நகர் 1 மற்றும் 2வது மெயின் ரோடு, வேலு நாயகர் தெரு, டி.என்.எச்.பி குடியிருப்பு போரூர் ராபிட் நகர், கோல்டன் எஸ்டேட், சக்தி அவென்யூ, குன்றத்தூர் ரோடு, கோவூர் ஏரிக்கரை சாலை, தெற்கு மலையம்பாக்கம் ஒரு பகுதி, கிண்டி பகுதி, ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி, ஆதம்பாக்கம், பகுதி, வாணுவம்பேட்டை பகுதி, டி.ஜி நகர், புழுதிவாக்கம் , நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை பகுதி, முகலிவாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மேலும், தண்டையார்பேட்டை, பெரம்பூர், கே.கே நகர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், சாலிக்கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்வெட்டு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

