அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை வாங்க மறுத்த, சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்ததுள்ளது.கடந்த 2011 – 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது, வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாகக் கூறி செந்தில் பாலாஜின் மீதி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை, டிஜிட்டல் முறையிலான ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை ஏற்காத சிறப்பு நீதிமன்றம், குறியீடு செய்யப்படாத ஆவணங்களை நிராகரித்தது.
அதன்பின்பு அமலாக்கத்துறை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி, குறியீடுகள் இல்லாத ஆவணத்தை நிராகரித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்தார். குறியீடுகள் இல்லாத ஆவணங்களை மாற்றி, சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடுத்த கார்த்திகேயன்,உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு மனுவை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து, உயர் நீதிமன்றதின் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது.