கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரும் மே 20 தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமௌலி
2001ம் ஆண்டு வெளியான ஸ்டுடென்ட் நம்பர்.1 படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் ராஜமௌலி. அதனையடுத்து 2009ம் ஆண்டு அவர் இயக்கிய மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு 2012ம் ஆண்டு அவர் இயக்கிய ஈகா படமும் தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியாகி பெரும் வசூல் செய்தது.
ஆர்.ஆர்.ஆர்
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு ராஜமவுலியின் அடுத்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், அவர் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியானது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.
பிரமாண்டமான படம்
இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆர்.ஆர்.ஆர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதிலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஓடிடியில் வெளியீடு
இந்நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதனையடுத்து இந்த படம் வரும் மே 20ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. ZEE5 ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது. மேலும், இந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரையரங்குகளில் பிரமாண்டமான அனுபவத்தை கொடுத்தது இத்திரைப்படம். இதனால் இந்தப் படம் ஓடிடியில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.