இந்தியாசமூகம்

ஞானவாபி மசூதி இந்துக்களுக்கு சொந்தமானதா ? – சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது ! தொடரும் சர்ச்சைகள்

ஞானவாபி மசூதி இந்துக்களுக்கு சொந்தமானதா? என தொடரப்பட்ட வழக்கில் வாரணாசி நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு. மசூதியில் சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதி – அம்மன் சிலை

வாரணாசி பகுதியில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோயில் அமைந்துள்ளது. அதனருகே ஞானவாபி மசூதி (Gyanvapi Mosque) அமைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில், ஞானவாபி மசூதி வளாக சுவரில் அம்மன் சிலை இருப்பதாகவும், இந்து சமயம் சார்ந்த குறிப்புகள் மசூதிக்குள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே மசூதிக்கு இந்துக்கள் சென்று இந்து கடவுள்களை வழிபட அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

கள ஆய்வு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழு ஒன்று அமைத்து, (காசி விசுவநாதர் கோயில் – ஞானவாபி மசூதி) வளாகத்தை சுற்றியுள்ள இடங்களை கள ஆய்வு செய்ய உத்தரவிட்டது. ஆனால் ஆய்வுப் பணிகள் சரியாக நடத்த இயலவில்லை, மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சீல் வைக்க உத்தரவு

பின்பு, வழக்கு ஆணையர் தலைமையில் தனிக்குழு அமைத்து, காவல்துறை, இராணுவ பாதுகாப்புடன் மூன்று நாட்கள் ஆய்வு நடைபெற்றது. அதன் முடிவில் மசூதி வளாகத்திற்குள் ‘சிவலிங்கம்’ கண்டெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவை தனி அறிக்கையாக நீதிமன்றத்தில் குழு சமர்ப்பித்தது. மேலும், நீதிமன்றம் சிவலிங்கம் எடுக்கப்பட்ட இடத்தை ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதன் பெயரில் அந்த இடத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இத்தனை சிக்கலுக்குள்ளும், மக்கள் இன்னலின்றி தொழுகை கடைபிடிக்கின்றனர்.

மறுஆய்வு

இந்த பிரச்சினையை மையப்படுத்தி ராஜஸ்தான் முதல்வர் கெஹ்லோத் பா. ஜ. க. மட்டும் பிரதமர் மோடியை நேரடியாகவே விமர்சித்து வருகிறார். அவர் மட்டுமன்றி பல்வேறு கட்சியினரும் தங்களுடைய கருத்துகளை இணையத்தில் பதிவிடுகிறார்கள். மீண்டும் மசூதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மறுஆய்வு செய்ய நீதிமன்றத்தில் பேச்சுக்கள் நிலவுகிறது. உச்ச நீதிமன்றத்திலும் இதன் தொடர்பான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது‌. அதன் தீர்ப்பையே அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Related posts