நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தொழுகை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மொஹரம் பண்டிகை
நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூர் தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்சனை எழுந்தது. பாரம்பரிய முறைப்படி தொழுகை நடத்துவது என்பனக்குறித்து, தர்கா நிர்வாகி கலிபா மஸ்தான் சாஹிப், நாகை ஆர்.டி.ஓவிடம் புகார் அளித்தார். அப்போது நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஆர்.டி.ஓ முருகேசன் கூறுகையில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் என்ற மற்றோர் தரப்பினர் சார்பாக, மொஹரம் தொழுகை ரத்து செய்யப்படுவதாக, தர்கா வளாகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டதால் தர்காவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் தலைமையில், தர்காவின் உட்புறம் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சம்பவம் காரணமாக வெளியூரில் இருந்து வந்த முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.

