சினிமாவெள்ளித்திரை

சிவாஜி 2 படம் வருமா? – ஏ.வி.எம் நிறுவனம் பதில் !

சிவாஜி-2 படத்தை எடுக்க வாய்ப்புள்ளதாக ஏ.வி.எம் நிறுவனத்தை சேர்ந்த அருணா குகன் கூறியுள்ளார்.

சிவாஜி 2

ஏ.வி.எம் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து இருக்கும் வெப் சீரியஸ் தமிழ் ராக்கர்ஸ் . ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த வெப் சீரியஸ் வரும் 19ம் தேதி பிரபல ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனால் இதன் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் அருணா குகன், ‘சிவாஜி-2 திரைப்படத்திற்கு நல்ல கதை அமைந்தால் எடுக்கலாம்’ என்று கூறினார்.

தயாரிப்பாளர் விளக்கம்

மேலும், ஏ.வி.எம் நிறுவனம் தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் தயாரிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, ‘நாங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது வெளியில் தெரியவில்லை. ஏ.வி.எம் நிறுவனம் எதற்கும் தயாராக உள்ளது’ என தெரிவித்தார்.

 

Related posts