Editor's Picksஅரசியல்தமிழ்நாடு

தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்த செய்தி என்னால்தான் தெரிய வந்தது – சீமான் !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான தம்பி பேரறிவாளனின் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. அவர்களில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர் சிறையில் இருந்தது என்னால்தான் வெளியே தெரிய வந்தது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியவர்கள் 31 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று இருக்கும் நிலையில், பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்து நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கட்சி தலைவர்களுக்கு நன்றி

இதனை தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அவரது தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தையும் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்.

நாம் தமிழர் கட்சி சீமான்

இந்நிலையில், சென்னை வண்டலூர் – மீஞ்சூர் பைபாஸ் சாலையில் மே 18 இன எழுச்சி மாநாடு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சீமான், ‘தமிழக அரசால் நான் கைது செய்யப்பட்டு ஆறுமாத காலமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். அதற்கு முன்பு முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் வேலூர் சிறையில் தான் இருந்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா ? நான் வேலூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு என் தம்பிகளை மொத்தமாக 3000-ம் பேர் தான் பார்த்திருப்பார்கள்.
ஆனால் நான் சிறையில் இருந்த ஆறுமாத காலத்தில் அவர்களை சந்தித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. அதற்கு பிறகுதான் இவர்கள் இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள் என்பதே வெளியே தெரியவந்தது.

பேரறிவாளனின் விடுதலை நம்பிக்கை

தம்பி பேரறிவாளனின் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. பேரறிவாளன் தொடர்ந்து சட்ட மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியப்படுத்தினார். இந்த தீர்ப்பு மற்ற அனைவருக்கும் பொருந்தும். மற்ற 6 நபர்களையும் விடுதலை செய்யவேண்டும். இதற்காக தனியாக போராட்டங்கள் செய்ய வைக்காதீர்கள்’ என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாட்டில் பேசியுள்ளார்.

Related posts