ஜப்பானில் ஒருவர் நாய் போல் உடை அணிந்து செய்யும் சேட்டைகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
மனிதனின் ஆசைகள்
பொதுவாக ஒருவருக்கு விபரீத ஆசை இருந்தால் உடனே அனைவருக்கும் எழும் கேள்வி, இதெல்லாம் சாத்தியமா ? என்பதுதான். ஆனால் எப்போதும் மனிதனின் கற்பனை என்பது நடைமுறை சாத்தியத்தை மீறியதாகவே இருக்கும். மேலும், மனிதனின் ஆசை எந்த எல்லைக்கும் போகும் பலம் வாய்ந்தது. அது தீய வழியில் இருந்தால் உலகத்திற்கே ஆபத்தாக கூட போகும். ஆனால் சிலரின் ஆசைகளோ வேடிக்கையாக இருக்கும்.
செல்லப் பிராணிகள்
அந்த வகையில் ஜப்பானில் ஒருவருக்கு நாயாக மாற வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. வளர்ப்பு பிராணிகளில் மிகவும் நன்றி உணர்வு உடையது நாய்கள். மனிதர்கள் எத்தனையோ செல்லப் பிராணிகளை வளர்த்தாலும், மனிதன் ஒரு நாயை வளர்ப்பது போல் இருக்காது. பூர்வஜென்மத்து உறவு என்பார்கள் உண்மையில் மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருப்பது பூர்வஜென்மத்து உறவு தான்.
நாய் மனிதன்
அந்த காலத்தில் இருந்து இப்பொது வரை நாய்களை வேட்டைகளுக்கும், பாதுகாப்புக்கும் வளர்த்து வருகிறார்கள். அதிலும் தற்போது நாய்கள் வீட்டில் ஒரு மனிதனாகவே வாழ தொடங்கிவிட்டது. இந்நிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்ற நபர் தனது உருவத்தை நாயாக மாற்றியமைக்க விரும்பியிருக்கிறார். இதற்காக இவர் ஜெப்பெட் என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு நாயை போல் உருவமைப்பு கொண்ட நவீன ஆடையை தயாரிக்க கூறியுள்ளார்.
வைரல் வீடியோ
இதற்காக டோகோ சுமார் 12 லட்சம் வரை செலவு செய்துள்ளார். மேலும், அதை நான் அணியும் போது மனிதன் என்று கண்டறியப்படக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நிறுவனம் 40 நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பான கோழி இன நாய் ஆடையை வடிவமைத்து கொடுத்துள்ளது. டோகோ அதை மகிழ்ச்சியாக அணிந்து கொண்டு செய்யும் சேட்டைகள் இணையத்தில் தற்போது கவனம் பெற்று வருகிறது.