சமூகம்சமூகம் - வாழ்க்கைசினிமா

தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

ஓடிடி ரிலீஸ்

லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்து கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இதில் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக நடிக்க, ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே ரசிகர்கள் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி லெஜெண்ட் விரைவில் நீங்கள் அனைவரும் காணும் வகையில் வரும்’ என என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts