சினிமாவெள்ளித்திரை

சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

யசோதா படத்தை அடுத்து நடிகை சமந்தா நடிப்பில், வரலாற்று படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. இதில் மலையாள நடிகர் தேவ் மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் குணசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். 3டி-யில் உருவாகியுள்ள இப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘சாகுந்தலம்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts