சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் இயக்கப்படும் வரும் 16ம் தேதி முதல் தினசரி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொற்கு ரயில்வே
கொரோனா தொற்றுக்கு பின்னர் தாம்பரம் – விழுப்புரம் இடையே முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள் தற்போது வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தாம்பரம் – விழுப்புரம் பயணியர் ரயில் வரும் 16ம் தேதி முதல் தினசரி இயக்கப்படும் என்று தொற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் தாம்பரம்- விழுப்புரம் மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

