புதிய அப்டேட்
1996-ம் ஆண்டு வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர்.சி. மேலும், அருணாச்சலம், வின்னர், கலகலப்பு போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 2006ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘தலைநகரம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் பெரும் வெற்றியடைந்தது. இதனிடையே தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க, ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘இருட்டு’ படங்களை இயக்கிய வி.இசட்.துரை இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ‘தலைநகரம் -2’ படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 14-ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜிப்ரான் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
The teaser of #SundarC‘s #ThalaiNagaram2 will be released on 14th December at 5 PM!
A @vdhorai film!#RightIsBack@righteye2021 #SMPrabakaran @krishnasamy_e @vichuviswanath @APVMaran #RSvenkat @maddyraja1 @teamaimpr @saregamaglobal pic.twitter.com/8hxT1RslXA
— Ghibran (@GhibranOfficial) December 11, 2022

