சினிமாபயணம்

மெட்ரோ ரயிலில் வாரிசு பட போஸ்டர்!

வாரிசு பட போஸ்டர்

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் ப்ரோமோஷன் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில்களில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts