சினிமாவெள்ளித்திரை

புதிய முறையில் போஸ்டரை வெளியிட்ட சேரன்!

போஸ்டர்

வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் சேரன். இவர் யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், ராஜாவுக்கு செக் போன்ற சில படங்களில் நடித்தும் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் அடுத்தாக நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இப்படத்தை இசக்கி கார்வண்ணன் எழுதி, இயக்கியுள்ளார். மேலும், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் போஸ்டரை ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை வைத்து படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts