நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதற்காக தெலுங்கானா எம்.எல்.ஏ ராஜா சிங் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சை கருத்து
இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துக்களை கூறியதால் தெலுங்கானா மாநில சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங்கை, தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை எதிர்த்து போராட்டங்களும் வெடித்தது. இந்நிலையில், கட்சியில் இருந்து ராஜா சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மத்திய ஒழுங்குக் குழுவின் செயலாளர் ஓம் பதக் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இடைநீக்கம்
அதில், ‘பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக நீங்கள் கட்சியிலிருந்தும், உங்கள் பொறுப்புகள் அல்லது பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.