அரசியல்கல்விதமிழ்நாடு

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து துணை வேந்தர்களுடன் ஆலோசனை !

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 30ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனை

உயர்கல்வி மேம்பாடு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கல்வி சேர்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த 17ம் தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம் முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related posts