இசை வெளியீட்டு விழா
பா.ரஞ்சித் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. துஷாரா விஜயன், கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோர் நடித்துள்ளனர். நீலம் புரடக்சன்ஸ், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
வெங்கட் பிரபு
அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, ரஞ்சித்தை எனக்கு 2007 காலகட்டத்திலிருந்து தெரியும். அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்து விட சொல்லி கேட்டார். ஆனால் பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார். மேலும், ரஞ்சித் படங்களை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ரஞ்சித் குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார்’ என்று கூறினார்.

