செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது.
தனுஷ் படம்
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை அடுத்து இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டனில் உருவாகியிருக்கும் திரைப்படம் நானே வருவேன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. நானே வருவேன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ரிலீஸ் தேதி
இந்நிலையில், நானே வருவேன் படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே தேதியில் தான் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

