சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுபயணம்

மகளின் இறப்புக்கு நீதி வேண்டி நடை பயணம் – முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் !

தனது மகள் இறப்புக்கு நீதி வேண்டி நடைபயணமாக முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதி வேண்டி நடை பயணம்

தனது ஸ்ரீமதி இறந்து 43 நாட்களாகியும் இன்னும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. விழுப்புரம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள மாணவிகள் யார் என்ற விவரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் எனது மகள் ஸ்ரீமதியின் தோழிகள்தானா என்பதை எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் வேளையில் அவர்களின் விவரங்களை நாங்கள் ரகசியம் காப்போம். மேலும், எனது மகள் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் வெளியே வர வேண்டும் என்பதற்காகவே இதனை கேட்கிறோம்.

மேலும்,  நீதி வேண்டி வெள்ளிக்கிழமை எனது சொந்த கிராமமான பெரிய நெசலூரில் இருந்து நானும், எனது கணவரும் நடைபயணமாக சென்னைக்கு சென்று தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்று அவர் கூறினார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஸ்ரீமதியின் பெற்றோர் நடைபயணம் இல்லாமல் முதலமைச்சரை நேரடியாக சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts