இந்தியாஉணவுசமூகம் - வாழ்க்கைமருத்துவம்

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் – மாநில அரசுகள் நடவடிக்கை தேவை !

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் காரணமாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

தக்காளி காய்ச்சல் 

கொரோனா, குரங்கம்மை உள்ளிட்ட நோய்களால் ஏற்கனவே கேரளா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ‘தக்காளி காய்ச்சல்’ என்ற புதிய நோய், சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் கேரளாவில் உள்ள கொல்லத்தில் கடந்த மே மாதம் 5ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. தற்போது பல மாநிலங்களுக்கு கண்டறியப்பட்டு வருகிறது.

இதனால், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், ‘நாடு முழுதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இடையே வேகமாக பரவுகிறது. உடல்சோர்வு, கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. குழந்தைகள் மட்டுமின்றி அனைவருக்களுக்கும் இந்தக் தக்காளி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோய் பரவும் தன்மை கொண்டது என்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இது வரை எந்த விதமான மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts