முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை நிறைவுபெற்றது.
அறுவை சிகிச்சை
திருவள்ளூர், ஆவடி வீராப்புரம் ஸ்ரீவாரி பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மனைவி செளபாக்யா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகள் டானியா (9), வீராப்புரம் அரசினர் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முகச்சிதைவு நோயால் கடந்த 6 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். நோயினை குணப்படுத்த அரசு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். பூந்தமல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து முகச்சிதைவு நோய் பாதித்த சிறுமி டானியாவுக்கு 9 மணிநேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

