அறிவியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

சென்னையில் புதிய ஆப்பிள் ஐபோன் 14 மொபைல் தயாரிக்கப்படும் !

சென்னையில் வரும் நவம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன் 14 மொபைல் தயாரிக்கப்பட இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் 14 மொபைல்

ஆப்பிளுக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து தரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஐஃபோன் 14ஐ உற்பத்தி செய்து முடிவு செய்துள்ளது. சென்னையில் ஃபாக்ஸ்கான், பெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய 3 ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிளின் ஐஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சீனாவில் அதிகப்படியான ஐபோன்களை தயாரித்து வந்த ஆப்பிள் நிறுவனம், கொரோனா ஊரடங்கு மற்றும் சீனா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் ஐபோன் உற்பத்தியை வேறு நாட்டில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிளின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts