இந்தியாதமிழ்நாடு

நளினி வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் !

ஆளுநர் ஒப்புதலுக்கு காத்துருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரிய நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இதனை முன்னாள் முதல்வர் தலைமையிலான அமைச்சரவை 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

rajiv gandhi

மனு தாக்கல்

தமிழக அரசு அனுப்பிய ஒப்புதலுக்கு ஆளுநர் முடிவெடுக்க தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் நளினி மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் மாலா தலைமை சிறப்பு நீதிமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர், நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ‘அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது’ என வாதிட்டார்.

nalini

நீதிபதிகள் விளக்கம்

அப்போது குறுக்கிட நீதிபதிகள் உச்சநீதிமன்றம் போல், விடுதலை செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது.  அதற்கு உச்சநீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்று கூறினர். அதற்கு நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலை செய்யக் கோரவில்லை எனவும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிடத்தான் கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

குடியரசு தலைவர் இன்னும் ஆவணங்களை ஆளுநருக்கு அனுப்பவில்லை எனவும், அனுப்பினாலும் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்பதால் நளினியை விடுதலை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரினார்.

madras high court

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

வழக்கு தள்ளுபடி

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்புக்கு வந்தது. அப்போது பேரறிவாளனை சிறப்பு அதிகாரம் பயன்படுத்தி விடுதலை செய்தது போல தங்களை விடுதலை செய்ய முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related posts