திண்டுக்கலில், வீதிவீதியாக யாசகம் வாங்கிய முதியவர் ஒருவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
தூத்தூக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் வேலை தேடி மும்பைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை கிடைக்காததால் வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார். பிறகு ஊர் திரும்பிய அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தனர்.
யாசகர் பூல் பாண்டியன்
பூல் பாண்டியன் சுமார் நாற்பதாண்டுகளாக யாசகம் செய்து வருகிறார். தான் யாசகம் எடுத்த பணத்தில் 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலி, மேசைகள், குடிநீர் சுத்திகரிப்பான் என பல்வேறு பொருள்கள் வாங்கி தந்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் நிதி உதவி
இதற்கிடையே, கடந்த வரம் திண்டுக்கல் பகுதியில் உள்ள கோவில்களிலும் அதனை சுற்றிய பகுதிகளில் பெற்ற யாசக ரூபாய் 10 ஆயிரம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பூல் பாண்டியன் தான் யாசகம் எடுத்து சேர்த்து வைத்த ரூபாய் 10 ஆயிரத்தை இலங்கை தமிழர்கள் நிதியுதவிக்காக ஆட்சித்தலைவர் விசாகனிடம் வழங்கினார். இதற்கிடைய, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா பேரிடர் நிதியாக பூல் பாண்டியன் மதுரை சுற்றி உள்ள பகுதியில் யாசகம் பெற்ற 10 ஆயிரம் நிதியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் நெகிழ்ச்சி
இலங்கை உள்ள தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், முதற்கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக உதவ முன் வர வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை வைத்ததை தான் அறிந்ததாகவும், இதனையடுத்து தான் யாசகம் செய்த பணத்தை வழங்கியதாக கூறினார்.
இச்செயல் அந்த சுற்றுவட்டார பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.