சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ் ஒரு பழமையான மொழி தமிழை பிற மாநிலத்திலும் பரப்ப வேண்டும்’ என்று ஆளுநர் ஆர் .என் ரவி பேசியுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில்
சென்னை பல்கலைக்கழகத்தில் 164 – வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர் .என் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி மற்றும் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், இன்று பட்டம் பெரும்அனைவருக்கும் பாராட்டுக்கள் இந்த நாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.
தமிழ் பழமையான மொழி
பிரதமர் கூறியது போல, தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் இருக்கைகள் பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்.
தமிழ் மொழியை நாடு முழுவதும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழின் இலக்கணமும், இலக்கியமும் பாரம்பரியமிக்கது பழமை வாய்ந்தது. 4500 ஆண்டுகளுக்கு முன்பே தொழில் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்.
கல்வி, தொழில், மருத்துவ துறைகளில் தமிழ் நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக கொண்டு சேர்ப்பதற்கு பாடுபடுவேன் என்று ஆளுநர் கூறினார்.
உயர்கல்வித்துறை அமைச்சர்
பட்டமளிப்பு விழா மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரிய மசோதாவை குடியஅரசு தலைவருக்கு அனுப்பிவைத்த ஆளுநர் ஆர் என் ரவிக்கு நன்றி கூறினார். முதல்வர் ஸ்டாலின் பேசும் பொது உயர்கல்வியில் தமிழகம் சிறந்த விளங்குவதாக கூறினார்.
அதே மேடையில் ஆளுநர் தமிழின் பெருமை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.