அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், உறங்காப்புலி என்று போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினம் இன்று!
இந்தியா விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதைத் தொடர்ந்து, 1957 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 முறை, உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியிலும், 1971 ஆம் ஆண்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வென்று மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களும், உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் பகுதிகளில், தன்னுடைய முயற்சியால் அரசுக் கல்லூரிகளை கொண்டு வந்ததுடன், தன் சொந்த நிலத்தை கல்விக்காகக் கொடுத்து பல மாணவர்களின் கல்விக் கண் திறந்தவர்!
இன்றைய நாளில், திரு.மூக்கையா தேவர் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்!

