தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.
கவுன்சில் கூட்டம்
கடந்த ஜூன் மாதம் இறுதியில் சண்டிகரில் 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ் நாடு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
சந்திப்பு
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லி சென்றார். அந்த சந்திப்பில், மதுரையில் நடைபெறவுள்ள 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கான தேதியை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

