திருவண்ணாமலை அருகே குடும்பத்தகராறில் 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி
திருவண்ணாமலை சதா குப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் மனைவி அமுதா. இவர்களுக்கு இளவரசன், குறளரசன் என்ற இரண்டு ஆண் குழந்தையும், யாஷினி என்ற பெண் குழந்தையும் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், கணவன், மனைவி இடையே நெடுநாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அமுதா தனது 3 குழந்தைகளையும் தென்பெண்ணை ஆற்றில் வீசி கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இச்செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற அமுதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் வீசப்பட்ட 3 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் அமுதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசிய தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

