68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் திரைக்கலைஞர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய விருது
2020ம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் 10 பிரிவுகளில் தமிழ்திரையுலகத்திற்கு 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சூரரைப் போற்று படத்திற்கு மட்டுமே சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தேசிய விருது பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ’10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 23, 2022

