அரசியல்இந்தியா

சட்டசபை தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் – முன்னாள் முதல்வர் எடியூரப்பா !

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா

கர்நாடக அரசியலில் மிக முக்கிய தலைவராக திகழ்பவர் பாஜகவை சார்ந்த எடியூரப்பா. கா்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடபெற இருக்கிறது. இதற்காக ஆளும் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களம் கண்டு மக்கள் பனி செய்துவருகின்றனர். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க இரு கட்சிகளும் முயற்சித்து செயல்பட்டு வருகின்றனர். எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் பலமுறை செயல்பட்டவர் என்பது அனைவரும் அறிந்தது. இந்நிலையில், எடியூரப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன். தனது சிகாரிபுரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார். என்னைவிட விஜயேந்திராவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சிகாரிபுரா தொகுதி மக்கள் வெற்றி பெற வேண்டும் என அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு தொகுதி மக்கள் தன்னை போலவே ஆதரவு அளித்து அரவணைக்க வேண்டும். அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்’ என எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Related posts