சினிமா

சூர்யா41.. பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா ; ஹீரோயின் யார் தெரியுமா?

திரைப்பட இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகவும், தனது படைப்புகளுக்காக தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவராகவும் திகழ்பவர் பாலா. இவரது இயக்கத்தில் பிதாமகன், நந்தா உள்ளிட்டவற்றில் நடித்ததன் பிறகே, நடிகர் சூர்யாவின் நடிப்பு திறனை திரையுலகம் முழுமையாக அறிந்துகொண்டது என சொல்பவர்களும் உண்டு.

அப்படியான நட்பினை கொண்ட பாலாவின் இயக்கத்தில் தற்போது மீண்டும் நடிக்க உள்ளார் சூர்யா. இது சூர்யாவின் 41 வது படமாகும். இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷும், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தினை தமிழில் பாலா இயக்கியதும், பின்னர் குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்துடன் உண்டான சிக்கலில் அந்த திரைப்படம் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related posts