Editor's Picksதமிழ்நாடு

துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது ; முதல்வர் மு.க ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாய்க்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அங்கு துபாய் வாழ் தமிழர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பல முக்கிய நிறுவனங்களுடன் சுமார் 6100 கோடி ரூபாயில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும், அந்நாட்டின் முக்கிய அமைச்சர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில், துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை விமானநிலையத்தில் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வாறு போடப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் காகித கப்பல்களாகவே இருந்தன.

ஆனால், தற்போது பல முக்கிய நிறுவனங்களுடன் சுமார் 6100 கோடி ரூபாயில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் சுமார் 14700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விரைவில் இத்தகைய ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்துள்ளார்.

Related posts