தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டிருந்தார். முதல்வரின் இப்பயணம் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
பாஜகவின் சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகி அருள் பிரசாத் என்பவர் கடந்த 25 ஆம் தேதி முதல்வரின் துபாய் பயணம் குறித்தும், முதல்வர் ஸ்டாலினின் உடைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த நிலையில், முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்புவதாக கூறி அவரை கைது செய்திருக்கின்றனர் காவல் துறையினர்.
முன்னதாக, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது, சாதி – மத நல்லிணக்கத்தை கெடுத்திடும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.