நாகையில் உள்ள நாகூர் தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகூர் தர்கா
நாகை, வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது நாகூர் தர்கா. இங்கு சையத் ஷாஹுல் ஹமீத் என்று அழைக்கக்கூடிய சூபி ஞானி சமாதி உள்ளது. இந்த தர்கா பிரபலமான பெரிய புனித யாத்திரை மையமாகு விளங்குகிறது. இந்தத் தர்காவில் இஸ்லாம் மதம் சார்ந்த மக்கள் மட்டுமின்றி மற்ற மதத்தை சார்ந்தவர்களும் வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.
நாகூர் தர்காவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழாவாக கந்தூரி விழாவாக உள்ளது. இது ஷாகுல் ஹமீதின் நினைவு தினத்தை போற்றும் விதமாக 14 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தர்காவின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையின்படி செயல்பட்டு வருகிறது. அந்த திட்ட ஆணையின்படி நாகூர் ஆண்டகையின் வாரிசுதாரர்கள் நிர்வாகித்து வருகின்றனர். தற்போது செய்யது காமில் சாஹிப் காதிரி என்பவர் தலைமை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

