அரசியல்தமிழ்நாடு

திமுக உட்கட்சித் தேர்தல் – நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் !

திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக உட்கட்சித் தேர்தல்

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், ‘திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தல் சென்னையைச் சேர்ந்த மாவட்டங்களின் ஒன்றியங்களுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. ஒன்றியங்களுக்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதகள் என 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களையும், தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை மாவட்டச் செயலாளர் அல்லது தலைமைக் கழக பிரதிநிதியிடமோ பெற்று ஆகஸ்ட் 24ம் தேதி திரும்ப அளிக்க வேண்டும். அவரவர் போட்டியிடம் இடங்களில் ஆகஸ்ட் 25ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்களில் பிரச்சினைகள் ஏதுமின்றி சுமூகமாக தேர்தல் நடைபெற நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதற்கட்டமாக, சென்னை வடகிழக்கு மாவட்டம், சென்னை தெற்கு மாவட்டம் உள்ளிட்ட இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Related posts