உலகம்வணிகம்

சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் போகிறதா இலங்கை? இராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்பு!

இயற்கை எழில் சூழ்ந்த நாடான இலங்கை, தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் பறிதவித்து வருகின்றனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ அரிசி 448 ரூபாயாகவும், பால் ஒரு லிட்டர் 263 ரூபாயாகவும் உள்ளது.பெட்ரோல் டீசல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதை தொடர்ந்து 1 சவரன் தங்க நகை 2 இலச்சத்திற்கு விற்கப்படுகிறது. உண்பதுக்கு ரொட்டி துண்டுகள் கூட வாங்கமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தேவை இல்லாத, வருவாய் ஈட்ட முடியாத திட்டங்களுக்கு இலங்கை அரசு நிதிகளை செலவு செய்ததுதான் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வாங்கிய கடனை கட்டமுடியாமல் அம்பாந்தோட் துறைமுகத்தை சீனாவிடம் தாரைவார்த்து இருக்கிறது இலங்கை.இலங்கை முழுவதும் சீனாவின் திட்டங்கள் கால் பதித்திருப்பது இலங்கை மக்களிடம் எரிச்சலூட்டும் விதமாக உள்ளது. இதற்கிடையே மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்ததை அடுத்து நடந்த அமைச்சரவை களைப்பில் சில ராஜபக்சேக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் கோத்தபைய ராஜபக்சாவும், மஹேந்திர ராஜபக்சாவும் தன் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கவே மக்கள் அவர்களை பதவி விலகக்கோரி வீதிகளில் இறங்கி பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபற்றுள்ளனர்.அவ்வாறு அவர்கள் பதவி விலகாவிட்டால் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு நன்கு படித்தவர்களைக் கொண்ட புதிய அரசு ஆட்சியில் அமர வேண்டும் என்பது அந்நாட்டு இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. சீனாவிடம் வாங்கிய கடன் மற்றும் தேவையற்ற திட்டங்கள், தவறான அணுகுமுறை போன்ற காரணங்களால் தான் இலங்கை இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts