Editor's Picksசினிமாவெள்ளித்திரை

சேத்துமான் படத்தின் அரசியலும், விமர்சனமும்!

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நேற்று ஓடிடியில் வெளியான ‘சேத்துமான்’ படம் பேசும் அரசியலும், விமர்சனமும்.

இயக்குனர் பா.ரஞ்சித்

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற தரமான படங்களை தயாரித்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். தான் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து சமூக அரசியல் பேசி வரும் இவர் தற்போது ‘சேத்துமான்’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.

சேத்துமான்

பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கிய இப்படத்தில் மாணிக்கம், சிறுவன் அஸ்வின், பிரசன்னா பாலசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் ’சேத்துமான்’ படம். நேற்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியகியிருக்கும் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல திரைப்பட விருதுகளை வென்றது.

சேத்துமான் பாராட்டப்படுவது உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்! - Kollywood Voice

கதையும், அரசியலும்

தாய், தந்தையை இழந்து தாத்தாவிடம் வாழும் பேரன், இருவருக்குமான பாசப்பிணைப்பு, மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை அவமானமாகப்படுத்துகிறவர்கள், பன்றி கறி சாப்பிடுபவர்கள் என்று இதை சுற்றித்தான் கதை நடக்கிறது. படத்தில் ஒரு முதியவரையும், ஒரு சிறுவனையும் வைத்துக்கொண்டு சர்வதேச அரசியலையே பேசியிருக்கிறார்கள்.

படம் எப்படி இருக்கிறது?

படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் வரும் மாணிக்கம், பேரன் கதாபாத்திரத்தில் வரும் அஸ்வின் என இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எதார்த்த நடிகர்கள், எதார்த்தமான திரைக்கதை என்று கதை நடக்கும் உலகத்தை கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர். படம் ஓடிடி தளத்தில் பார்க்கும் எளிமையான காட்சியமைப்பு தான் என்றாலும் திரையரங்கில் ஆரவாரத்தை ஏற்படுத்தும் வசனங்கள்.

Seththumaan Tamil Movie Download (2022) 480p 720p 1080p HD

தொழில்நுட்ப பணிகள்

பின்னணி இசை மற்றும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு நம்மை கைபிடித்து அழைத்து செல்கிறது.

இயக்குநர் காட்டுகிற கொங்குப் பகுதி வாழ்வியல், உணவுமுறை மிகத்துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் என்ற சமூக உண்மையை படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.

Related posts